நடந்து முடிந்த 'பிக்பாஸ்' சீசன்-3 நிகழ்ச்சியில் மிகவும் பக்குவப்பட்ட நபர் என்ற பெயர் எடுத்தவர் நடிகை ஷெரின். 'மைதா மாவு' என்றும் மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் நடுவில் சில பிரச்னைகளை சந்தித்த அவர், பாராட்டுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி முரணான விமர்சனங்களும் அவர் மீது தொடுக்கப்பட்டன. அதை அவர் பொறுமையாக கையாண்டவிதம் அனைவரைக்கும் பிடித்தது. அந்நிகழ்ச்சியின் கடைசி நாள் வரை ஷெரின் இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்த பின்னர் அவர் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தற்போது சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான 'அசுரன்' படத்தை பார்த்த ஷெரின் அப்படத்தின் நாயகன் தனுஷை வாழ்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் வாழ்க்கை தனுஷின் 'துள்ளுவதோ இளமை' படம் மூலம் தொடங்கியதை அப்பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.
தனது ட்வீட்டில், 'இப்படித்தான் எனது பயணம் தொடங்கியது! என் வாழ்விலும் தனுஷின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்து. இப்போது நான் இங்கிருக்கிறேன். அவர் தனது ப்ளாக்பஸ்டர் படமான 'அசுரன்' படத்துடன் இருக்கிறார். உங்கள் அனைவரின் பலத்த ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்! உங்கள் மைதாமாவு ஷெரின்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #CheranFansAgainstCyberBullying காண்டான சேரன்: கருத்து சொன்ன விவேக்!