தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குறும்படம் இயக்கத்தில் கால் பதித்த ரம்யா நம்பீசன் - ரம்யா நம்பீசன் யூடியூப் சேனல்

எனது பார்வை, எனது உலகம், புதுபுது ஐடியாக்கள், பல புதுமையான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக தான் தொடங்கியிருக்கும் யூடியூப் சேனல் அமைந்திருப்பதாகக் கூறும் நடிகை ரம்யா நம்பீசன், முதல் முறையாக இயக்கியிருக்கும் குறும்படத்தை வெளியிடவுள்ளாராம்.

Ramya nambeesan turn as short film director
Actress Ramya Nambeesan

By

Published : Feb 16, 2020, 11:59 AM IST

Updated : Feb 16, 2020, 3:41 PM IST

சென்னை: நடிகை, பாடகி என கலக்கி வரும் ரம்யா நம்பீசன் அடுத்தாக குறும்பட இயக்குநராகியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ரம்யா நம்பீசன் மலையாளம், தமிழ் மொழிப்படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் இவ்விருமொழிகளிலும் பாடல்களும் பாடி பாடகியாகவும் கலக்கி வருகிறார்.

Ramya Nambeesan Encore என்ற பெயரில் தனக்கென தனி ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். இதையடுத்து இவர் தனது இயக்கத்தில் உருவான குறும்படத்தை வெளியிடவுள்ளார். 'தி ஹைட் (யுஎன்)லெர்ன்' The Hide (UN)learn என்ற பெயரில் இருக்கும் இந்த குறும்படம், சமூகத்தில் பெண்களின் வாழ்வு, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வு பற்றி பேசுகிறது.

Actress Ramya Nambeesan

இந்தக் குறும்படத்தை ரம்யா நம்பீசன் கருவாக உருவாக்கி, தன் குரலில் விவரித்து, இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசனின் சகோதரர் ராகுல் சுப்பிரமணியம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இக்குறும்படம் குறித்து ரம்யா நம்பீசன் கூறியதாவது: 'எனது இந்தப் பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. உலகில் உள்ள அனைவருடனும், எனது அன்பை, உணர்வை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. எனது பார்வையை, எனது உலகத்தை, புது புது ஐடியாக்களை, பல புதுமையான விஷயங்களை முயன்று பார்க்க மிகப்பெரும் சுதந்திரம் இந்த யூடியூப் தளத்தின் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்த தளத்தில் முதல் விடியோவாக 'தி ஹைட் (யுஎன்)லெர்ன்' The Hide (UN)learn எடுக்க ஆரம்பித்தேன். இது இயக்குநராக எனது முதல் முயற்சி. இந்தப் படம் இன்றைய நவநாகரீக உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை, இந்திய சமூகத்தில் அவர்களின் நிலையை சொல்லக்கூடியதாக இருக்கும்.

இது எனது முதல் படைப்பாக தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சி. வழக்கமான படங்களைப் போல் வெறும் பிரச்னைகளை மட்டுமே பேசக்கூடியதாக இல்லாமல் இறுதியில் பிரச்னைகளுக்கான தீர்வை பற்றி விவாதிக்கவும் செய்வதாக இருக்கும்.

எனது தளம் மூலம் குறும்படஙகள் மட்டுமல்லாது, பாடல்கள், நடனம் மற்றும் கலைவடிவங்கயும் வெளியிட முயற்சிப்பேன் என்றார்.

இதையும் படிங்க: ரொமாண்டிக் படமானாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் - 'ஓ மை கடவுளே' படக்குழு பேட்டி

Last Updated : Feb 16, 2020, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details