சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு வெள்ளித்திரை நடிகைகளுக்கே சவால் விட்டு வந்தவர், தர்ஷா குப்தா.
இவர் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கமாக இருந்தது. இதனால் இவரை பின்தொடர்வேரின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதற்கிடையில் 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து இவர் தற்போது 'செந்தூரப் பூவே' என்னும் தமிழ்த்தொடரில் நடித்து வருகிறார்.