தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வு - actress Chitra murder case

தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வு
நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வு

By

Published : Feb 5, 2021, 7:09 PM IST

நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், பட்டுப்புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று (பிப். 5) இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும், சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதேபோல அவரது தொலைப்பேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கைகள், பிப்ரவரி 10ஆம் வந்துவிடும் என எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதனைப்பதிவு செய்த நீதிபதி, வழக்கை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க... விவசாயிகளை புதிய சட்டத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம்!

ABOUT THE AUTHOR

...view details