தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரையரங்கு வெளியீட்டுக்கு காத்திருக்கும் டாக்டர்! - Tamilnadu latest news

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

By

Published : Jun 27, 2021, 6:09 PM IST

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக, ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி இருந்தநிலையில், கரோனா தொற்றால் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரபல ஓடிடி நிறுவனமும், இத்திரைப்படத்துக்கு நல்ல விலை கொடுத்து வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஓடிடி நிறுவனம் விடுத்த சில நிபந்தனைகளுக்கு சிவகார்த்திகேயன் செவி சாய்க்க மறுத்ததால், டாக்டர் திரைப்படத்தின் வியாபாரம் முடியவில்லை எனத் தெரியவந்துள்ளது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்பதால், டாக்டர் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடலாம் என்று சிவகார்த்திகேயன் தரப்பு முடிவு எடுத்துவிட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: பிகில் ராயப்பனாக மாறிய மயில்சாமி - வைரல் லுக்!

ABOUT THE AUTHOR

...view details