விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது என்ற தகவலே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தகவல்கள் அனைத்தும் உண்மையாகியுள்ளன. கௌதம் மேனன், சிம்பு இணையும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.