சென்னை: நடிகர் சிம்பு நடிப்பு, பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என பன்முகத்தன்மை கொண்டவர். இவரது குரலில் ஏற்கனவே நிறைய பாடல்கள் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளன. தனது படங்களுக்கு மட்டுமின்றி மற்ற படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார். தற்போது அவர் நடித்திருக்கும் மாநாடு படத்திற்கும் யுவன் இசையமைத்திருக்கிறார்.
யுவன் இசையில் மீண்டும் பாடல் பாடிய சிம்பு! - Actor Silambarasan
யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள ஆல்பத்திற்கு நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

Album song
இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள ஆல்பத்தில் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதில் காளிதாஸ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாண்டி மாஸ்டர் இதற்கு நடனம் அமைத்துள்ளார். இந்த இசை ஆல்பம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி