கரோனாவால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அதில் திரையரங்குகளும் அடங்கும். கரோனா சமயத்தில் பலரும் ஓடிடி தளங்களில் திரைப்படங்களை பார்த்து வந்ததால் ஏராளமான ஓடிடி தளங்கள் புதிது புதிதாக உருவாகின. இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது ஓடிடியை அடுத்து தொலைக்காட்சியில் படத்தை நேரடியாக ஒளிபரப்ப ஒருசில தயாரிப்பாளர்கள் முடிவு செய்து படங்களை ஒளிபரப்புகின்றனர். முத்தையா இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த 'புலிக்குத்தி பாண்டி', சமுத்திரக்கனியின் 'ஏலே' ஆகிய படங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.