தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் புகழ்பெற்றவர் நகைச்சுவை நடிகர் ’பிளாக்’ பாண்டி. நடிப்பு, இசை எனப் பன்முகம்கொண்ட பாண்டி, உதவும் மனிதம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பலருக்கும் உதவிகளைச் செய்துவருகிறார்.
அதன்படி, தற்போது 5 மாணவர்களைப் படிக்க வைத்துவரும் பாண்டியையும், அவரது தங்கையையும், நடிகர் சிவக்குமார்தான்படிக்கவைத்துள்ளார். எனவே, அந்த உந்துதலில்தான் தானும் அமைப்பு ஏற்படுத்தி ஏழை மாணவர்களைப் படிக்கவைப்பதாகக் கூறுகிறார்.