தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2021, 7:01 AM IST

ETV Bharat / sitara

மீண்டும் வருகிறது அஜித்தின் 'பில்லா' - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா' திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார்
Actor Ajith Kumar

அஜித் கதாநாயகனாக நடித்த 'பில்லா' திரைப்படம் 2007ஆம் ஆண்டில் வெளியானது. விஷ்ணுவர்தன் இயக்கி இருந்து இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். பிரபு, ரகுமான், சந்தானம் உள்ளிட்டோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நமீதா நடித்திருந்தார். இது ரஜினி நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் ரீமேக் ஆகும்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான பில்லா முழுக்க முழுக்க மலேசியாவிலே படமாக்கப்பட்டது. ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்திருந்த இந்த திரைப்படம், வசூலில் புதிய சாதனை படைத்து, அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அஜித் - நயன்தாரா

இந்நிலையில் பில்லா திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவிருக்கிறது. அஜித் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனாதால், பில்லா படத்தை உற்சாகமாக வரவேற்க தல ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

இதையும் படிங்க: யாரும் வாய்ப்பு தருவதில்லை - வடிவேலு வருத்தம்!

ABOUT THE AUTHOR

...view details