65 நாள்கள் பிஸியாகும் தல.. ஹெச்.வினோத்துக்கு கால்ஷீட் - Ajith - H.vinoth team
இயக்குநர் ஹெச்.வினோத் படத்துக்காக நடிகர் அஜித் 65 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் ஹெச்.வினோத். அதனை தொடர்ந்து பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார். அந்த படமும் வெகுவாக பாராட்டைப் பெற்றது.
தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் - அஜித் கூட்டணி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அஜித் 65 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வலிமை படத்திற்கு பின்புதான் வெளிவரும் என்றும் தெரிகிறது.