அரசன் ஒருவன் மசூதி அருகே ஒரு கோயிலை கட்டுகிறான், இதனால் கலவரம் ஏற்படுகிறது. அதில் போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒரு தாய் தனது மகள் ஒரு இஸ்லாமிய மாணவனுடன் கல்லூரியில் பேசுவதைக் கண்டு மிரட்சி அடைகிறார். ஏனென்றால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் வன்முறையாளர்கள், கொடூரமானவர்கள், தவறான எண்ணத்துடன் பழகக்கூடியவர்கள். கொல்கத்தாவாசிகள், அதிலும் குறிப்பாக பெண்கள், நேர்மையற்றவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். சமத்துவத்துக்கு எதிரான தங்கள் பாட்டிகளின் பழமைவாத கருத்துகளை தூக்கியெறியும் பெண்களே இவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்.
A Suitable Boy - இந்தியாவில் தொடரும் அவலநிலை - தபு
1993ஆம் ஆண்டு விக்ரம் சேத் எழுதிய ‘ஏ ஸ்யூட்டபிள் பாய்’ (A Suitable Boy) நாவல் டிவி சீரிஸாக வெளியாகியுள்ள நிலையில், அது இன்றைய இந்தியாவின் சூழலுக்கு பொருந்திப்போவது பற்றி மூத்த பத்திரிகையாளர் காவிரி பம்சாய் எழுதியவை பின்வருமாறு...
1993ஆம் ஆண்டு விக்ரம் சேத் எழுத்தில் வெளியான A Suitable Boy நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளவை இன்றும் பொருந்திப்போகிறது. விக்ரம் சேத் எழுதிய இந்நாவலின் காலகட்டம், இந்தியா சுதந்திரம் பெற்றதையொட்டிய காலம் (1951) ஆகும். இதை 6 பாகங்களாக பிபிசி ஒன் டிவி சீரிஸ்க்கு இயக்கியுள்ளார் இயக்குநர் மீரா நாயர். ஆண்ட்ரியூ டேவிஸ் இந்த நாவலை டிவி சீரிஸாக்கும் முயற்சியில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
இது மிக முக்கியமான கதை என்கிறார் பத்திரிகையாளர் காவிரி மம்சாய். இதில் தபு, ரசிகா டுகல், இஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 26ஆம் தேதி வெளியான ’A Suitable Boy’, ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.