இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதி மருத்துவர் நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீங்கள்தான் ரியல் ஹீரோக்கள்: மருத்துவர்கள் தினத்திற்கு வாழ்த்துக் கூறிய வரலட்சுமி - Doctors day
சென்னை: மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் மருத்துவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், 'இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார். உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. நான் உங்களுக்கு நன்றி சொல்ல இந்த ஒரு நாள் போதாது என எனக்குத் தெரியும்.
நீங்கள் அயராது உழைக்கிறீர்கள் எங்களுக்காக உங்கள் உயிரை பனையம் வைத்து உழைக்கிறார்கள். அதற்காக கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசிர்வதிப்பார். எங்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள்' என பதிவிட்டுள்ளார்.