தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழ்நாடு தற்போது சந்திக்கும் பிரச்னை:  கண்டனம் தெரிவித்த வைரமுத்து

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து
வைரமுத்து

By

Published : Jul 18, 2020, 5:00 PM IST

நடப்பாண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சியின் எல்லைப் போராட்டம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் வெளியிட்டிருந்த காணொலி விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

சேனலின் தொகுப்பாளர், உரிமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, சேனல் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதுமுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுக்கு அதிகளவிலான காவல்துறையினர் நியமிக்கப்பட்டு சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல பிரச்னைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கண்டனங்கள் தெரிவித்து பல்வேறு தரப்பினர் சமூக வலைதள பக்கத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப் பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரியார் இழிவு செய்யப்படுவதைச் சகிக்க முடியாத எங்களால், முருகன் அடியார்கள் காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details