தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டை கரோனா இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க இரவும் பகலும் உழைத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திரையுலகைக் காக்கும் வகையில் திரையரங்குகளைத் திறந்து ஐம்பது விழுக்காடு இருக்கைகளுடன் இயங்குவதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
'திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றிவையுங்கள் முதலமைச்சரே!'
சென்னை: குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு விண்ணப்பித்துள்ள தயாரிப்பாளர்களுக்கு மானியத் தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தமிழ்நாடெங்கும் உள்ள திரையுலக ரசிகர்கள் சிறிது இடைவெளிக்குப் பிறகு திரையரங்கை நோக்கிவர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக முதலமைச்சருக்குத் தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மானியத் தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வாழவைக்க வேண்டுமாய் இருகரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.