திரைப்பட நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் பேசுகையில், 'மத்திய, மாநில அரசுகளே. வெளிநாட்டில் பணிபுரிந்து கரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து, அரசு செலவில் அழைத்து வரவேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
'தமிழர்களை தாங்கிப் பிடிக்க இந்த பதாகையைத் தாங்குகிறேன்' - டி.ராஜேந்தர் - மனித நேய மக்கள் கட்சி
வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில், தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி. ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜேந்தர்
இந்தக் கருத்தை முன்னெடுத்து மனிதநேய ஜனநாயக கட்சி, பதாகை ஏந்திப் போராட்டம் நடத்தி வருகிறது. இப்போராட்டத்திற்கு ராஜேந்தர் பதாகை ஏந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து டி. ராஜேந்தர் கூறுகையில், 'வெளிநாடு வாழ் தமிழர்களை தாங்கிப் பிடிக்க, இந்தப் பதாகையை நான் தாங்கிப் பிடிக்கிறேன். மனிதநேய மக்கள் கட்சியின் இந்த முயற்சியை பாராட்டுகிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார் .