மும்பை: ஆர்யா கதாபாத்திரத்துக்காக பத்து ஆண்டுகள் வரை காத்திருந்ததாகவும், வாழ்நாளில் சிறந்த கதாபாத்திரம் எனவும் நடிகை சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.
பாலிவுட், பிராந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா சென் முதல் முறையாக ஆர்யா என்ற வெப்சீரிஸ் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார். இதையடுத்து இந்தத் தொடரின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. குடும்பம், காதல், க்ரைம் என, அனைத்தும் கலந்த கலவையாக இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
ஆர்யா என்ற கேரக்டரில் தோன்றும் சுஷ்மிதா சென் இந்தத் தொடரில் நடித்திருப்பது பற்றி கூறியதாவது," இது போன்றதொரு கதாபாத்திரத்தில் நடிக்க பத்து ஆண்டுகள் வரை எதிர்நோக்கி காத்திருந்தேன். இக்கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது வாழ்நாளில் சிறந்த கதாபாத்திரமாக கருதும் ஆர்யா கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை அளித்த இயக்குநர் ராம் மாத்வானிக்கு நன்றிகள்.