தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் சுல்தான்! - Actor Karthi Sultan movie

நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஓடிடியில் வெளியாகும் சுல்தான்
ஓடிடியில் வெளியாகும் சுல்தான்

By

Published : Apr 26, 2021, 7:22 PM IST

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்து ஏப்ரல் 2ஆம் தேதி வெளியான திரைப்படம் சுல்தான். எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, நெப்போலியன், லால், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் பொதுமக்களையும் திரையரங்கு நோக்கி வரவழைத்தது.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர்.

ஓடிடியில் வெளியாகும் சுல்தான்

ஹாட்ஸ்டார் மற்றும் சிம்ப்ளி சௌத் ஆகிய தளங்களிலும் இப்படம் வெளியாகிறது.

ABOUT THE AUTHOR

...view details