தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "திரைப்படத் தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக சென்னை பனையூரில் ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புத் தொடங்கும். வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வரும் நடிகர், நடிகைகளுக்கு விரைவாக மருத்துவப் பரிசோதனை நடத்தி மருத்துவச் சான்று அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.