பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரியவன்ஷி. அக்க்ஷய் குமார், கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தை புரொமோஷன் செய்யும் பணியில் ரோஹித் ஷெட்டி இறங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'வெள்ளிக்கிழமை என்னுடைய படம் வெளியாகிறது என்றால் எனக்கு சிறிது பயம் இருக்கும்.
திரைப்படம் வெளியாகும்போது சிறிதளவிலாவது, இயக்குநருக்கு பயம் இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு என்ன மாதிரியான கதை பிடிக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டுதான் நான் படம் இயக்குவேன். அந்த வகையில்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளேன். இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.