தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் ஆசையை நிறைவேற்ற ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்ட ரசிகர்கள்! - சுசாந்த சிங் உயிரிழப்பு

மும்பை : மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைவுகூரும் விதமாக அவரது ரசிகர்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளதாக சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

us
us

By

Published : Sep 14, 2020, 3:23 PM IST

Updated : Sep 14, 2020, 3:36 PM IST

கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ அலுவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, எனது சகோதரனுக்காக 1000 மரங்களை நடுவதே எனது குறிக்கோள் என்றும், அவன் நினைவாக நான் இதை செய்கிறேன் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு Plants4SSR என்றும் பெயரிட்டு, ரசிகர்களையும் மரக்கன்றுகள் நட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் மரம் நடும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர். சுமார் மூன்று மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்களை அவர்கள் நட்டுள்ளனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ரசிகர்கள் மரம் நடும் காட்சிகளை ஒன்றிணைத்து இரண்டு நிமிடக் காணொலி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வேதா சிங் வெளியிட்டுள்ளார்.

அதில், "#Plants4SSR என்ற ஹேஷ்டேக்குடன் உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. இதைச் செய்ததற்கு மிக்க நன்றி'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

Last Updated : Sep 14, 2020, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details