சென்னை: 2021 புத்தாண்டை ஒன்றாக வரவேற்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா ரொமாண்டிக்கான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
எந்தவொரு பண்டிகை நாளாக இருந்தாலும் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்வதையும், புகைப்படம் பதிவிடுவதையும் தவறாமல் கடைப்பிடித்துவரும் கதாநாயகியாக இருந்துவருகிறார் நயன்தாரா.
குறிப்பாக காதலன் விக்னேஷ் சிவனுடன் ஸ்பெஷல் தருணங்களில் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் லவ்வோடு, லைக்குகளையும், ஷேர்களையும் அள்ளுவதையும் வாடிக்கையாகச் செய்துவருகிறார்.