தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'5ஜி சேவையைத் தடை செய்ய வேண்டும்' - நடிகை ஜுஹி சாவ்லா - Juhi Chawla against 5g

5ஜி தொழில் நுட்பத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என நடிகை ஜுஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நடிகை ஜுஹி சாவ்லா
நடிகை ஜுஹி சாவ்லா

By

Published : Jun 1, 2021, 6:29 AM IST

இந்தியாவில் தற்போது 4ஜி இணையதள வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது 5ஜி தொழில் நுட்பம் உலகம் முழுவதும் அறிமுகமாகவுள்ளது.

அதற்கான முதற்கட்டப்பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஜியோ, ஏர்டெல், ஐடியா ஆகிய நிறுவனங்கள் சீனா அல்லாத வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து சோதனை செய்ய மத்திய அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய மாநிலங்களில் ஆறு மாதம் ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5ஜி சேவைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகை ஜுஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'நாங்கள் புதிய தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் அல்ல. புதுப்புது தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

செல்போன் டவர்களிலிருந்து வெளியிடப்படும் ரேடியோ கதிர்கள், மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும். அதனால் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 5ஜி தொழில் நுட்பத்திற்குத் தடை விதிக்க வேண்டும்.

மேலும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு இதனால் எந்தவித ஆபத்தும் இல்லை என சான்றளிக்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details