தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

போராட்ட ஹாலிவுட் நடிகை ஐந்தாவது முறையாக கைது - ஆஸ்கர் வென்ற நடிகை கைது

கடந்த அக்டோபார் மாதத்திலிருந்து தற்போது வரை பருவநிலை மாற்றத்துக்கு வெள்ளிக்கிழமைதோறும் போராடி வரும் ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகையும், போராளியுமான ஜேன் ஃபோன்டா ஐந்து முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

protest against climate change
Actress Jane Fonda arrested

By

Published : Dec 21, 2019, 5:15 PM IST

வாஷிங்டன்: பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக ஹாலிவுட் நடிகை ஜேன் ஃபோன்டா ஐந்தாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் ஃபோன்டா. சில சமயங்களில் பல்வேறு பிரபலங்களோடு இணைந்து போராடி வருகிறார்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும், புதைபடிவத்திலிருந்து வரும் எரிபொருள்களுக்கு (பெட்ரோல், டீசல், நிலக்கரி) எதிரான இயக்கங்கள் மீது கவனம் செலுத்துமாறும் தனது போராட்டங்களில் வலியுறுத்தி வருகிறார்.

இதையடுத்து போலீஸார் அவர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கைது செய்தனர். கைகளில் விலங்கிட்டு ஃபோன்டாவை போலீஸார் அழைத்துச் செல்லும் விடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதனிடையே ஃபோன்டா மீது வழக்குகள் ஏதும் பதியப்படவில்லை என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், அவருடன் கைது செய்யப்பட்டவர்களின் மீது பொது இடத்தில் கூட்டமாக நின்று இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details