தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டிஜிட்டல் மயமாகும் மணிரத்னம் படங்கள்! - மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

டிஜிட்டல் மயமாகும் மணிரத்னம் படங்கள்
டிஜிட்டல் மயமாகும் மணிரத்னம் படங்கள்

By

Published : Apr 30, 2021, 10:48 AM IST

இயக்குநர் மணிரத்னம், இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநராகப் புகழப்படுபவர். இவரது படங்களுக்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது.

மணிரத்னம் தற்போது தனது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுத்துவருகிறார். இப்படத்தில் கார்த்தி, பிரபு, ஐஸ்வர்யா ராய், விக்ரம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 26 படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட்ட பின்னர் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details