தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் அட்லீயின் திரைப்படம்! - Tamil new movies in Netflix

சென்னை: அட்லீ தயாரித்துள்ள ‘அந்தகாரம்‘ திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்தகாரம்
அந்தகாரம்

By

Published : Jun 1, 2020, 5:48 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரிய நடிகர்கள் படம் தொடங்கி சிறிய நடிகர்கள் படங்கள்வரை வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன.

சில தயாரிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து தங்களது படங்களை அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் நேரடியாக வெளியிட முடிவுசெய்துள்ளனர்.

அந்த வகையில் முதலாவதாக ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்‘ படம் மூன்று நாள்களுக்கு முன்பு அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அந்த வரிசையில் தற்போது அட்லீ தயாரித்துள்ள ‘அந்தகாரம்‘ திரைப்படமும் இணைந்துள்ளது.

விக்னராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்தகாரம்

மேலும் இத்திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details