தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மயக்கத்தில் 'சாஹோ' : காமிக்ஸ் படம் எடுத்த இயக்குநர்! - ஷ்ரதா கபூர்

திடீர் திடீர் திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு ஆச்சிரியம் அளிக்கும் வகையில் அமைந்த சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

saaho

By

Published : Sep 1, 2019, 1:54 PM IST

பல மில்லியன்களுக்கு சொந்தக்காரர் ஜாக்கி ஷெரோப் (ராய்). ஆரம்பமே மத்திய அமைச்சரை மிரட்டி சில காரியங்களை சாதிக்க நினைக்கிறார். அதற்காக பெரும் தொகை கப்பல் வழியாக இந்தியா வருகிறது. இதற்காக மும்பை வரும் ராய், பாதி வழியில் மரணம் அடைகிறார்.

இதற்கிடையில், நகரத்தில் பெரிய திருட்டு நூதனமாக நடக்கிறது. அதைக் கண்டறிய சிறப்பு காவல் பிரிவு காவல் அதிகாரியாக வருகிறார் அசோக் சக்ரவர்த்தி (பிரபாஸ்). அந்தத் திருட்டைக் கண்டறிந்தாரா?, ராயின் கொலைக்கு காரணமவர்களை பிரபாஸ் ஏன் பழிவாங்குகிறார் என படம் முழுக்க நினைத்துப் பார்க்கவே முடியாத அதிரடி திருப்பங்களுடன் சாஹோ கதை நகர்கிறது.

பாகுபலி பிரபாஸ் வேறு, சாஹோ பிரபாஸ் வேறு பாணியில் தெரிகிறார். பிரபாஸ் காட்சிக்கு காட்சி மயக்கத்தில் உள்ளாரா என தோன்றுகிறது. மேக் அப் படுமோசம். மந்த நிலை நடிப்பு. ஆங்காங்கே நடக்கிறார், திடீரென பறக்கிறார்.

பத்து நிமிடத்திற்கு ஒரு வசனம். இவர் தான் இப்படின்னா. நடிகை ஷ்ரதா கபூர் முதிர்ச்சியான தோற்றம் அளிக்கிறார். இப்பட கதாபாத்திரங்களுக்கு டிஐ எனப்படும் கலர் கரெக்ஷன் செய்ய மறந்து விட்டார்களோ என தோன்றுகிறது. ஃப்ரேம் பை ஃப்ரேம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலர்.

கதாபாத்திரம்தான் இப்படி என்றால் கதையும் கிரைக்கதையும் ஒன்றொடு ஒன்று ஒட்டவில்லை. ஒரு அண்டர்கவர் போலீஸை காவல்துறைக்கே தெரியாமல் போய் விடுவது என்ன லாஜிக்கோ. ஆக்ஷன் படமா இல்லை காமிக்ஸ் படமா என்று தோன்றவைக்கிறது.

பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவு இப்படத்திற்கு பிளஸ். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு படத்தை எங்கேயோ பயணிக்க வைக்கிறது. மொத்தத்தில் சாஹோ ரோபோ வேகத்தில் சுழல்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details