ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் ஒரு படத்தில் நடித்துவருகின்றனர். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா.
இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவரும் ஊர்வசி, தமிழில் முதன்முதலாக நடிப்பதற்கு லதா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊர்வசி உடன் உரையாடிய அவர், உங்கள் முதல் தமிழ் படத்துக்கு என்னுடைய வாழ்த்துகள். இது உங்களுக்கு நல்ல தொடக்கமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.