சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் ‘டைகர் 3’ படத்தில் மாஸான ஸ்டண்ட் காட்சிகளில் கத்ரீனா கைஃப் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். நீண்ட காலமாக திரைத்துறையில் பயணித்துவரும் அவருக்கு, இதுவரை சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாண்டம், டைகர் சிந்தா ஹே போன்ற படங்களில் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார். எனினும், ‘டைகர் 3’ படத்துக்கான ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கப் போகிறதாம்.