தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ‘chak de india' நடிகை வாழ்த்து - chak de india: Sagarika Ghatge congrats Indian Women's Hockey team

‘chak de india' படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்த சகாரிகா கட்கே, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

chak de india: Sagarika Ghatge congrats Indian Women's Hockey team
chak de india: Sagarika Ghatge congrats Indian Women's Hockey team

By

Published : Aug 2, 2021, 3:28 PM IST

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல்முறையாக அரையிறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இன்று ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தேர்வானது. இதற்கு அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ‘chak de india' படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்த சகாரிகா கட்கே, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் ஹாக்கி அணியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த அவர், ஒலிம்பிக் அரையிறுதிக்குள் நுழைந்ததன் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி புதிய வரலாற்றை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துகள். நமது பெண்கள் இன்னும் அதிக சக்தி கிடைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ‘chak de india' நடிகை வாழ்த்து

chak de india படத்தில் நடித்த மற்றொரு நடிகையான சித்ரஷி ராவத், தானும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக்கான் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான படம் ‘சக் தே இந்தியா’. இந்திய மகளிர் ஹாக்கி அணி உருவாக்கத்தில் உள்ள பின்னணி அரசியல் குறித்து பேசிய இத்திரைப்படம், பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்தப் படத்தில் வருவது போலவே இந்திய மகளிர் அணி தனது முயற்சியால் முன்னேறி வருகிறது.

இதையும் படிங்க:3டியில் வெளியாகும் 'பெல் பாட்டம்' திரைப்படம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details