தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் 'ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்': டிசி ரசிகர்கள் மகிழ்ச்சி! - ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட் ட்ரெய்லர்

வாஷிங்டன்: 'ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்' ட்ரெய்லர் வெளியாகி டிசி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்
ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்

By

Published : Aug 25, 2020, 4:59 PM IST

டிசி காமிக்ஸின் 'ஜஸ்டிஸ் லீக்' என்ற திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸேக் ஸ்னைடர் இயக்கியிருந்தார். இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஆனால் இந்த படத்தின் இறுதிகட்டத்தின் போது ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்துகொள்ளவே, அவரால் இப்படத்தின் வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போனது.

எனவே படத்தின் மீதி பணிகளை மேற்கொள்ள 'அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜாஸ் வீடன் உதவியை படக்குழுவினர் நாடினர். இதனையடுத்து இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து திரையரங்கில் வெளியானது. ஆனால் வெளியான சில நாட்களிலேயே படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இயக்குநர் ஸேக் ஸ்னைடர் இயக்கிய படத்திலிருந்து, இது முழுவதும் விலகி இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே ஸேக் ஸ்னைடர் எடுத்து முடித்த பதிப்பை மட்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற வார்னர் பிரதர்ஸ் ஸேக் ஸ்னைடரின் ‘ஜஸ்டிக் லீக்’ ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றி அறிவிப்புகள், முன்னோட்டங்கள் 'டிசி ஃபேன்டம்' என்ற நிகழ்ச்சி இணையதளத்தில் நடைபெற்றது. அதில், 'தி பேட்மேன்', 'வொண்டர் வுமன் 1984', 'ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்' உள்ளிட்ட படங்களின் ட்ரெய்லர்கள் வெளியாகின.

இதுகுறித்து ஸேக் ஸ்னைடர் கூறுகையில், இது ஒரு அற்புதமான பயணம். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் ரசிகர்களுடன் நல்ல முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது. இது எங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நீங்கள் இதற்கு முன் பார்த்திராத ஃப்ளாஷ் கதாபாத்திரத்தை காண்பீர்கள். இப்படம் ஓடிடியில் நான்கு பாகங்களாக வெளியாக உள்ளது. ஒவ்வொரு பாகமும் ஒரு மணி நேரம் கொண்டதாக இருக்கும் என்று கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள டிசி ரசிகர்கள் 'ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்' திரைப்படத்தைப் பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details