'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்துவருகிறார். 'வலிமை' என்று பெயர் வைக்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இதுவரை 50 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 'வலிமை' படத்தில் 'தல' அஜித்துடன் ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு இசையினை யுவன் சங்கர் ராஜா அமைக்க, ஒளிப்பதிவினை நிரவ் ஷா கையாள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்துவருகிறார். படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை படக்குழுவினர் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாடமல் இருந்த நிலையில், சமீபத்தில் அஜித் சண்டை காட்சியின் போது பைக்கில் ஸ்டண்ட் செய்யும் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்கு இசை கோர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய்க்கு மாஸ்டர் ரீலிஸ், தளபதி 65, மாஸ்டர் ஹேஷ் டேக் ட்ரெண்டிங் என அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி விஜய் ரசிகர்கள் குஷியாகியிருக்கும் வேளையில் தல ரசிகர்கள் இந்த அப்டேட்டை கொண்டாடி வருகின்றனர்.