சென்னை விமான நிலையில் திமுக எம்.பி கனிமொழியிடம் சி.ஐ.எஸ்.எஃப் அலுவலர், ‘இந்தியராக இருந்துகொண்டு இந்தி தெரியாதா’ என்று கேள்வி எழுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ஆயுஷ் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில், ‘இந்தி தெரியாததால் தமிழக மருத்துவர்களை வெளியேற சொன்ன சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், காவிரி நடுவர் மன்ற செயல்பாடு குறித்து ஆர்.டி.ஐயில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியில் மட்டும் பதிலளித்துள்ளது. இந்த விவகாரங்கள் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.