தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, 2014ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். இவர், இஸ்லாம் மதம் மாறியது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், சமீபத்தில் யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பயம் என்ன? நீங்கள் அதை எப்படி கடந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.