சென்னை: அரோல் கொரேலி இசையில் நாய்களுக்கு இடையே நடக்கும் ரெமாண்டிக் பாடலை பாடியுள்ளார்.
பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் மாயஜாலம் நிகழ்த்தும் யுவன் ஷங்கர் ராஜா தனது குரலில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தனது இசையமைப்பில் மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பல சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த நிலையில், நாய் கதாபாத்திரத்தை பிரதானமாக வைத்து 'அன்புள்ள கில்லி' என்ற பெயரில் புதிய படம் தயாராகிவருகிறது. இந்தப் படத்தில் இரண்டு நாய்களுக்கு இடையே நடக்கும் காதல் காட்சிகள் உள்ளன. படத்தில் தளபதி விஜய்யின் ரசிகராக வரும் ஒரு நாய் கதாபாத்திரம் மற்றொரு பெண் நாய் மீது காதல் வயப்படும் ரொமாண்டிக் பாடல் இடம்பெறுகிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது மேஜிக்கல் குரலில் பாடியுள்ளார்.
படத்துக்கு மிஷ்கினின் பிசாசு, துப்பாறிவாளன் படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். நடிகர்கள் மைத்ரேயன், துஷாரா, சாந்தினி, 'மைம்' கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.