இளையராஜா, ரஹ்மான் வரிசையில் அதிக ரசிகர்களை கொண்டவர் யுவன் சங்கர் ராஜா. மறக்க முடியாத பல பாடல்களை தந்துள்ளார். இந்தியாவில் யுவன் அளவுக்கு பிஜிஎம் அமைப்பவர்கள் வெகு சிலரே. அவரது சில ஆல்பங்கள் சரியாக போகவில்லை என்றாலும், ரசிகர்கள் குறைந்ததே இல்லை.
பதிலடி கொடுத்த யுவன் ரசிகர்கள் - இன்ஸ்டாகிராம்
யுவன் சங்கர் ராஜாவை கலாய்த்தவர்களுக்கு அவரது ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
yuvan : PATHILADI KODUTHA YUVAN
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் யுவனுக்கு ஃபாலோயர்ஸ் குறைந்து வருவதாக நெட்டிசன்கள் சிலர் கலாய்த்துள்ளனர். இதையறிந்த யுவன் ரசிகர்கள், உடனடியாக களத்தில் இறங்கி பலரையும் யுவனின் இன்ஸ்டா பக்கத்தை லைக் செய்ய வைத்துள்ளனர். இதனால் தற்போது யுவனின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. பதிலடி கொடுத்த யுவன் என்ற தலைப்பில் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பீடி தாத்தாவுக்கு துரோகம் செய்த ரஞ்சித் - சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்!