தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதல்முறையாக வலிமை பட பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட யுவன் - yuvan revealed valimai update

நடிகர் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்து முதல்முறையாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

யுவன்
யுவன்

By

Published : Jun 22, 2021, 10:19 AM IST

நடிகர் அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இசையமைத்துள்ளார்.

படத்தின் பெயர் மட்டுமே வெளியான நிலையில், இன்னும் ஒரு போஸ்டர்கூட வெளியாகவில்லை. அதனால்தான் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டுவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 21) இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில், வலிமை படத்தில் தாயைப் போற்றும் வகையில் அறிமுகப் பாடல் ஒன்று உள்ளது எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆசிட் காயத்திலிருந்து யோகா எப்படி மீளவைத்தது? - நினைவுகூரும் கங்கனா

ABOUT THE AUTHOR

...view details