கலைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கி கெளரவிக்கப்படும் 'கலைமாமணி விருது' 2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வழங்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த எட்டு ஆண்டுகளில் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யபட்ட நபர்களுக்கு விருது விழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைப்பெற்றது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திரைப்பட ஒளிப்பதிவாளர் என்.வி.ஆனந்தகிருஷ்ணன், திரைப்பட நடிகை வரலட்சுமி, திரைப்பட நடிகர் பிரசன்னா, குணச்சித்திர நடிகர் ஆர்.பாண்டியராஜன், நடிகர் கார்த்தி, குணச்சித்திர நடிகர் பொன்வண்ணன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, திரைப்பட நடிகர் பிரபுதேவா, நடிகர் சசிக்குமார், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, நடிகர் சந்தானம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன் உட்பட பல்வேறு திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு தங்கப் பதக்கமும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டன.