தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆக்ரோஷப்பட்ட கமல்; தந்தைக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்! - மக்களவை தேர்தல்

தந்தையின் கோபத்தைக் கண்டு வியந்துபோன ஸ்ருதிஹாசன், மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் ட்விட்டர்

By

Published : Apr 13, 2019, 7:08 PM IST

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி 21 மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் காட்டுத்தீ போல் தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர் .

தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டிவரும் சூழலில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி, எச்.ராஜா பேசும் உரையை தொலைக்காட்சியில் காண்கிறார். அப்போது எச்.ராஜா யூ ஆர் ஆண்டி இந்தியன் என்று சொல்வதைக் கேட்டதும் கோபத்தை அடக்க முடியாத கமல்ஹாசன், ஆக்ரோஷத்துடன் தனது கையில் வைத்திருந்த டிவி ரிமோட்டால் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கிறார்.

இதன்பின்னர், கேமரா முன்பு மக்களிடம் கேள்விகளை வைத்து பேசும் கமல்ஹாசன், "முடிவு பண்ணீட்டிங்களா யாருக்கு வாக்களிக்க போறீங்கன்னு, போன்போட்டு உங்களது அப்பா, அம்மாவின் அறிவுரையை கேட்பதற்கு முன்பு மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பெண்ணை கொலை செய்தார்களே அந்த பெண்ணின் பெற்றோரிடம் கேட்டு வாக்களிங்க, நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில், அதை தட்டி கேட்கும் ஒருத்தனாக, உங்களில் ஒருவனாக கேட்கிறேன், யாருக்குயா ஓட்டு போடப் போறீங்க?

குனிந்து கும்பிடு போடாதீங்க, தலை நிமிர்ந்து வாக்களியுங்கள், ஏப்ரல் 18 நீங்கள் வெற்றிக்களம் காணும் நாள், நாங்களும்தான்" என்று அவர் கூறியுள்ளார். தற்போது இந்த காணொளி வலைதள பக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், இந்தக் காணொளியை பார்த்த கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், "அப்பா உன்னை நினைத்து பெருமை அடைகிறேன். எனது ஓட்டு உங்களுக்குதான்" என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே, தனது தந்தைக்காக ஸ்ருதிஹாசன் தேர்தல் பரப்புரையில் இறங்கிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details