ஸ்ரீவாரி ஃபிலிம் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் தர்மபிரபு. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த நகைச்சுவை திரைப்படம், அப்போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.
இந்நிலையில், தற்போது இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சாட்டிலைட் மூலமாகவும் ஓடிடி தளத்தின் மூலமாகவும் வெளியிடப்படுகிறது.
அதன்படி தெலுங்கில் இத்திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும் அட்ஷத் என்பவர் எழுதியுள்ளார். அதேபோல கன்னடத்தில் உமா என்பவரும், மலையாளத்தில் நிஷாத் என்பவரும் இத்திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளனர்.