தமிழ்த்திரை உலகில் தற்போது மிகவும் பிஸியான நடிகர்களுள் ஒருவர் யோகி பாபு. அவர் தற்போது பல படங்களில் இடைவிடாமல் இரவும் பகலும் நடித்துவருகிறார். அதில் ஒன்றுதான் 'ஜாம்பி' .
கோடை வெயிலை குளிர்விக்க வருகிறது யோகி பாபுவின் ‘ஜாம்பி’! - யாஷிகா ஆனந்த்
நடிகர் யோகி பாபு நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, இப்படம் கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபுவுடன், யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், மனோபாலா, யூ ட்யூப் பிரபலங்களான 'பிஜிலி' ரமேஷ், ஜான் விஜய் என பலர் நடித்துள்ளனர். எஸ்3 பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நல்லான் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரே இரவில் ஒரு விடுதியில் நடக்கும் சம்பவத்தைக் கொண்டு கதை நகர்த்தப்படுவதால் பெரும்பாலான காட்சிகள் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விடுதியைச் சுற்றி எடுக்கப்பட்டுவருகிறது. தற்போது ஒரு பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்ததுள்ளதையடுத்து, கோடையில் இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.