தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கங்காதேவி: யோகி பாபுவின் ஹாரர் திரைப்படம் - comdian yogi babu new movie

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, த்ரில்லர் கலந்த ஹாரர் திரைப்படமாக 'கங்காதேவி' என்ற திரைப்படம் உருவாகிவருகிறது.

yogibabu in new comedy horror movie
yogibabu in new comedy horror movie

By

Published : Feb 23, 2021, 5:14 PM IST

ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ் தயாரிப்பில், மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படம் 'கங்காதேவி'. இவர் இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

யோகிபாபுவின் கங்காதேவி
யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் 'சூப்பர்' சுப்புராயன் வில்லனாக நடிக்கவிருக்கிறார். முன்னணி நடிகை ஒருவரும் நடிக்க இருக்கிறார். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். 'காக்கா முட்டை' பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் குறித்து இயக்குநர் கூறுகையில் ''ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா, தேவின்னு இரட்டை வேடங்கள் உள்ளன.
யோகிபாபுவின் கங்காதேவி

குறிப்பிட்ட விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், த்ரில்லர், ஹாரர், காமெடி கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கிறோம். 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் போல பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைந்திருக்கும். குடும்பத்துடன் சிரித்து ரசிக்கும் படமாக இருக்கும். பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இத்திரைப்படத்துக்கு இசையமைக்க உள்ளார்" என்றார்.

இதையும் படிங்க :பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு!

ABOUT THE AUTHOR

...view details