தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு! - நடிகர் யோகி பாபு

சென்னை: நடிகர் யோகி பாபு தனது பிறந்தநாளை எளிமையான முறையில் வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தார்.

Yogibabu celebrating  birthday at home
Yogibabu celebrating birthday at home

By

Published : Jul 23, 2020, 2:54 AM IST

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறியப்படும் யோகி பாபுவுக்கு நேற்று பிறந்தநாள். எதார்த்தமான வடசென்னை ஸ்லாங்கில் பேசி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் யோகி பாபு. இவர் பல நகைச்சுவை நடிகர்களை பின்னுக்குத்தள்ளி, குறுகிய காலத்தில் தமிழ் திரையுலகில் உச்சத்தை அடைந்தவர்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம்வரும் யோகி பாபுவின் கால்ஷீட்டிற்காக பிரபல நடிகர்கள் காத்திருக்கும் நிலை தற்போது நிலவி வருகிறது என்றால் அது மிகையல்ல.

சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் முடித்த இவர், தற்பொழுது கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது 35ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தார், நண்பர்களுடன் தனது வீட்டில் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சிம்பிளா பிறந்த நாள் செலிபிரேண் பண்ண யோகி பாபு!

இதையும் படிங்க...ஐஐடியில் படிக்க விருப்பமா? அதுவும் அதிக வேலை வாய்ப்புள்ள துறையில் படிக்கணுமா? -பதிலளிக்கின்றனர் ஐஐடி பேராசிரியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details