தமிழ்சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர், நடிகர் யோகி பாபு. ஒரு ஆண்டில் இவரது நடிப்பில் குறைந்தது 10 முதல் 12 படங்கள் வரை வெளியாகிறது. இதற்கிடையில் சமீபத்தில் விஜய்யின் 65ஆவது படத்தில் தான் நடிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபுவிடம், ரசிகர் ஒருவர் 'வலிமை' படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் 'ஆம்...'என்று பதிலளித்தார்.