சென்னையில் நடைபெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட யோகிபாபு, படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். ரஜினிகாந்துடன் மேடையின் முதல் வரிசையில் அமர வைத்ததில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்,
ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்:
'பாட்ஷா' படத்திற்காக 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துக் கொண்டுபோய் படம் பார்த்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தராதா? என்று கூறினார்.
மேலும் தர்பார் படத்தில் யோகிபாபுவின் கதாபாத்திரம் குறித்த கேள்விக்கு:
'இவருகிட்ட வேல வாங்கறதுக்கு தள்ளு வண்டிய தள்ளிட்டுபோய் வியாபாரம் பார்த்தாலே நாலு காசு சம்பாரிக்கலாம்' என படத்தில் ஒரு வசனம் பேசியுள்ளேன், இதை வைத்து படத்தில் எனது கேரக்டரை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்.
தை மாதம் எனக்கு திருமணமாகிவிடும் என ரஜினியே கூறிவிட்டார் ரஜினி குறித்து பேசுகையில், ‘அவருக்கு காமெடி நடிகர்களே தேவை இல்லை, அவரை முழுமையாக ரசிக்கிறேன், தனித்துப் பார்த்து ரசிக்க ஏதுமில்லை’ என்றார்.
யோகி பாபுவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர்:
‘விரைவில் திருமணம் செய்து கொள்வேன், வருகிற தை மாதம் எனக்கு திருமணமாகிவிடும் என ரஜினியே கூறிவிட்டார். அதனால் திருமணம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்’ என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.