தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தி பட போஸ்டரை காப்பி அடித்த பேய் மாமா - pei mama poster

யோகி பாபு நடித்துள்ள பேய் மாமா படத்தின் போஸ்டர் இந்தி பட போஸ்டர் போல் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பேய் மாமா
பேய் மாமா

By

Published : Sep 21, 2021, 2:08 PM IST

தமிழில் ஒரு ஆண்டில் 10 படங்கள் வெளியானால் அதில் ஐந்து படங்கள் திகில் கலந்த படமாகத்தான் வெளியாகின்றன. அந்த வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம், 'பேய் மாமா'.

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தைச் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இவருடன் மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். காமெடி ஹாரர் படமாக உருவாகியுள்ள இது கரோனா காரணமாக நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்ட போஸ்டர் ஏற்கனவே இந்தியில் வெளியான 'BHOOT' படத்தின் போஸ்டர் போலவே இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

போஸ்டரில் ஹீரோவின் முகத்திற்குப் பதிலாக யோகி பாபுவின் முகம் அதில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், 'என்னதான் லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா' என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்துவருகின்றனர்.

இதையும் படிங்க:தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டவர் மீது பாய்கிறது குண்டர் சட்டம்

ABOUT THE AUTHOR

...view details