தமிழ் சினிமாவில் தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு. அவரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. இப்படி நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த யோகி பாபு, நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்திலிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார். இவர் கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உள்ளன.
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு! - பொம்மை நாயகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சென்னை: பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'பொம்மை நாயகி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
Yogi
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அப்படத்திற்கு 'பொம்மை நாயகி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷான் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக அதிசயராஜ், இசை அமைப்பாளராக சுந்தரமூர்த்தி, எடிட்டராக ஆர்.கே. செல்வா பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 22) தொடங்கியுள்ளதாக பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.