அனுசரண் முருகய்யன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பன்னி குட்டி’. இதில் சிங்கம்புலி, ‘கலக்கப்போவது யாரு’ ராமர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டுக்கல் லியோனி இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
யோகி பாபுவின் ‘பன்னி குட்டி’ டீசர் விரைவில்... - கருணாகரன்
யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பன்னி குட்டி’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.
pannikutty
லைகா நிறுவனம்தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கே இசையமைத்துள்ளார். சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்ய, படத்தின் இயக்குநர் அனுசரண் முருகய்யனே எடிட்டிங் பணிகளை செய்கிறார். ’பன்னி குட்டி’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து, அடுத்தகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. வெகுவிரைவில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.