சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. இப்படத்தை இயக்கிய சபரிநாதன் முத்துப்பாண்டியன் அடுத்து யோகிபாபுவை வைத்து 'மீன் குழம்பு' என்னும் படத்தை இயக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தின் திரைக்கதை 'சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை' என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது. திரைப்படம் உருவாகும் முன்பே மீன் குழம்பு திரைப்படத்தின் திரைக்கதை, விருது வென்றிருப்பது யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.