தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

போனி கபூருக்கு முன் அப்டேட் கொடுத்த யோகி பாபு - producer Boney Kapoor

'வலிமை' அப்டேட்டுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு நடிகர் யோகி பாபு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

யோகி பாபு
யோகி பாபு

By

Published : Jul 1, 2021, 6:50 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர், யோகி பாபு. இவர் நடிப்பில் ஒரு ஆண்டுக்குக் குறைந்தது 8 முதல் 10 படங்கள் வெளியாகின்றன.

அந்தவகையில் இந்த ஆண்டு இவர் கைவசம் 20-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்கள், பட அப்டேட்கள் குறித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜூலை.1) புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அஜித் புகைப்படம் எடுக்க யோகி பாபுவும், மொட்டை ராஜேந்திரனும் அமர்ந்து சிரிக்கும்படி உள்ளது.

இப்புகைப்படம் வேதாளம் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படமாக இருந்தாலும், வலிமை அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது சற்று ஆறுதலை அளித்திருக்கிறது.

இதையும் படிங்க:டாக்டர். சாய் பல்லவி செந்தாமரை - வைரலாகும் புகைப்படம்

ABOUT THE AUTHOR

...view details